ஃபாஸ்ட் புட் சாப்பிட்டு வந்ததால் வளர்ச்சியடைந்த மார்பகம்: அதிர்ச்சியடைந்த வாலிபர்
ஃபாஸ்ட் புட் சாப்பிட்டு வந்ததால் வளர்ச்சியடைந்த மார்பகம்: அதிர்ச்சியடைந்த வாலிபர்
பாஸ்ட் புட் சாப்பிட்டு வந்ததால் வாலிபர் ஒருவருக்கு மார்பகம் பெரியதானதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சீனாவின் கிழக்கு ஜீஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சியோ யாங். இவர் தன்னுடைய 13 வயதிலிருந்து தொடர்ந்து ஃபாஸ்ட் புட் சாப்பிட்டு வந்துள்ளார். அப்போதிலிருந்தே தன்னுடைய வலது பக்க மார்பு வளர்ந்து வளருவதை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது பெண்களுக்கு இருப்பது போன்று இவருடைய வலது பக்க மார்ப்பு பெரிதாகியுள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த சியோ யாங், சீனாவின் ஜிஜியாங் வென்சூ சென்ட்ரல் மருத்துவமனை மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த தலைமை மருத்துவர், பருவடையும் போது இளம் வயதினர் கொண்டிருக்கும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு சியோவுக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய வளர்ச்சியடைந்த மார்பகப் பகுதி நீக்கப்பட்டது. அதன் பிறகு 5 நாட்கள் கழித்து அவர் வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவரின் கருத்துப்படி, வருடத்திற்கு இது போன்ற பிரச்சனைகள் கொண்ட 100 இளைஞர்கள் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். ஃபாஸ்ட் புட் அதிகளவில் எடுத்துக்கொள்வதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பாஸ்ட் புட்டில் பாலினங்கள் தொடர்பான ரசாயனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment