இந்து பெண்ணொருவரும் யூத பெண்ணொருவரும் செய்த காரியம் : பிரித்தானியாவில் புதிய வரலாறு
இந்து பெண்ணொருவரும் யூத பெண்ணொருவரும் செய்த காரியம் : பிரித்தானியாவில் புதிய வரலாறு
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து முறைப்படி இடம்பெற்ற இந்த திருமணம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
இவ்வாறு வேறு இரு மத பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் ஒரே பாலின திருமணம் செய்து கொள்வது பிரித்தானியாவில் இதுவே முதல் தடவையென நம்பப்படுகிறது.
பிரித்தானிய லெயிசெஸ்டர் பிராந்தியத்தைச் சேர்ந்த கலாவதி மிஸ்ரியும் (48 வயது) அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மிரியம் ஜெப்பர்ஸனுமே இவ்வாறு ஒரே பாலின திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
கலாவதியும் மிரியமும் 20 வருடங்களுக்கு முன்னர் பயிற்சி வகுப்பொன்றின் போது ஒருவரையொருவர் முதல் முதலாக சந்தித்து மனதைப் பறிகொடுத்திருந்தனர்.
மத ரீதியில் கடுமையான ஆசாரங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பமொன்றைச் சேர்ந்த கலாவதி, மிரியத்துடனான தனது காதலை பல வருடங்களாக தனது குடும்பத்தினரிடம் மறைத்து வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னரே அவரது குடும்பத்தினர் இது தொடர்பில் அறிந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் டெக்ஸாஸ் மாநிலத்தில் யூத முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்த ஒரே பாலின ஜோடி தற்போது இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளது.
திருமணத்தை நடத்தி வைக்க இந்து மதகுரு ஒருவரை தேடிக் கண்டுபிடிப்பதில் அவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ள கலாவதியும் மிரியமும் தமது எஞ்சிய வாழ்க்கையை டெக்ஸாஸ் மாநிலத்தில் கழிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment