தல தல என தியேட்டரில் இடி முழங்க ரசிகர்கள் கத்தபோகும் சீன் இதுதான்…
தல தல என தியேட்டரில் இடி முழங்க ரசிகர்கள் கத்தபோகும் சீன் இதுதான்…
வெற்றி என்பது ஏதோ நேற்று பெய்த மழையில், இன்று முளைக்கும் குடை ரிப்பேர் கடையல்ல! அதற்கு ஏகப்பட்ட முதலீடுகள் வேண்டும். முக்கியமாக மண்டை! (அதனால்தான் தல-ன்னு கூப்பிடுறாங்களோ?) விவேகம் படத்தில் அஜீத் சொன்ன ஒரு சீன், தியேட்டரை திடுதிடுக்க வைக்கும். சந்தேகமில்லை. அது என்ன சீன்?
படத்தில் தாறுமாறான ஒரு பைட் காட்சி. கையில் சிக்கும் ஒரு கருப்பு ஆட்டை பொட் பொட் என்று சுட்டுத்தள்ளும் அஜீத், அதற்கப்புறம் ஒரு வீர நடை நடந்தபடியே வர வேண்டும். காட்சியை விளக்கிவிட்டாராம் டைரக்டர் சிவா. கவனமாக கேட்டுக் கொண்ட அஜீத், இந்த இடத்தில் ஒரு கரெக்ஷன். நான் இதற்கு முன் பல படங்களில் ஸ்டைலா நடந்து வந்திருக்கேன். ஆனால் இந்த முறையும் அப்படி வருவதற்கு பதிலாக வேற ஏதாவது செய்யலாமே? யோசிங்க என்று கூறிவிட்டார்.
அன்று இரவு முழுக்க மண்டையை பிய்த்துக் கொண்ட சிவாவுக்கு, உருப்படியாக ஒன்றும் சிக்கவில்லை. ஆனால் அஜீத் மண்டைக்குள் அந்த சீன் பளிச் காட்டிவிட்டது. அஜீத் சொல்ல… சிவா எடுத்த காட்சி…. ஆவ்சம்!
அந்த கருப்பு ஆட்டை ஆத்திரத்தோடு சுட்டுக் கொன்ற அஜீத், அப்படியே தன் ஆத்திரம் தணியாமல் திரும்பி சுவற்றை நோக்கி தன் புல்லட் கணைகளை வீச, பல்லாயிரம் துப்பாக்கி ரவைகள் அந்த சுவற்றை துளைத்தன. கடைசியில் பார்த்தால்… அந்த துப்பாக்கி ரவையின் மூலம், AK என்று தனது பெயரையே பொறித்து விடுவார் அஜீத்.
இதை காட்சியாக யோசிங்க மக்களே…!
எப்ப நேரடியாக டைரக்ஷன்ல இறங்கப் போறீங்க அஜீத்?
Post a Comment