Header Ads

கேரளாவில் மம்முட்டி, மோகன்லாலை அலற வைத்த அஜித்

கேரளாவில் மம்முட்டி, மோகன்லாலை அலற வைத்த அஜித்




பொதுவாக ஆந்திரா, கேரளாவில் அந்த மாநிலங்களின் நடிகர்கள் நடித்து டப் ஆகி தமிழுக்கு வரும் படங்கள் பெரிதாக வரவேற்பைப் பெறுவதில்லை. விஜயசாந்தி, டாக்டர் ராஜசேகர் காலத்தோடு முடிந்து போனது. அவ்வப்போது ‘அருந்ததி’, ‘பாகுபலி’ மாதிரியான படங்கள் வசூலை அள்ளும். ஆனால் நம் தமிழ் நடிகர்களுக்கு தமிழ்நாட்டைப் போலவே ஆந்திரா, கேரளாவில் பிரம்மாண்டமான ஓபனிங் இருக்கும்.
குறிப்பாக கேரளாவில் மம்முட்டி, மோகன்லாலுக்கு இணையான ரசிகர்கள் பலம் விஜய்க்கு உண்டு. அதுவும் கமல்ஹாசனை அவர்கள் தம் மாநில நடிகராகத்தான் இன்றும் நினைத்து விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள். அதுபோலவே இப்போது அஜித்தும் கேரளாவில் தன் கெத்தைக் காட்ட வைத்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படம் வரும் 24-ஆம் தேதி ரிலீசாவதால்
தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளாவே அதக்களமாகிக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் எந்த நடிகருக்கும் இல்லாத அளவில் 9௦ அடி மெகா சைஸ் பிரம்மாண்ட கட் அவுட்டை வைத்து மிரட்டியுள்ளார்கள் திருவனந்தபுரம் அஜித் ரசிகர்கள். கேரளாவில் 3௦9 தியேட்டர்களில் ரிலீசாகும் விவேகத்திற்கு 5௦ தியேட்டர்களுக்கும் மேலாக ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு.
அஜித்தின் மாஸால் மம்முட்டி, மோகன்லால் போன்ற பெரிய நடிகர்களே கொஞ்சம் டெண்ஷனாகத்தான் உள்ளார்களாம்.

No comments