குழந்தை பெற்றுக்கொள்ள பயமாய் இருக்கிறது; மோடியிடம் நடிகை கவலை
குழந்தை பெற்றுக்கொள்ள பயமாய் இருக்கிறது; மோடியிடம் நடிகை கவலை
சுதந்திர இந்தியாவில் பெண் குழந்தை பெற்றுக்கொள்ள பயமாய் இருப்பதாக பிரதமர் மோடியிடம் இந்தி நடிகை ஒருவர் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சுதந்திரதினத்தன்று சண்டிகரில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய இந்தி சின்னத்திரை நடிகை திவ்யங்கா திரிபதி, தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியை டேக் செய்து டுவீட் செய்துள்ளார். அதில், சாலையில் உள்ள குப்பைகளை மட்டும் சுத்தம் செய்யாமல், பெண்களை பாலியல் வன்கொடுகமைகளுக்கு உள்ளாக்கும் ஆண்களையும் பிரதமர் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், பெண்களுக்கு எதிரான இது போன்ற சம்பவங்களால்,பெண் குழந்தைப் பெற்றுக்கொள்ள தனக்கு பயமாக இருப்பதாகவும் குறிப்பட்டுள்ளார்.
Post a Comment